Loading

வேடசந்தூர் : வேடசந்தூரில் அடுத்தடுத்த 7 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேடசந்தூர் முக்கிய பஜராக கடைவீதி உள்ளது. இப்பகுதியில் கூட்டுறவு வங்கி உள்ள இடத்தின் அருகில், நகைக்கடை, செல்போன், ஜவுளிக்கடைகள் என நெருக்கமாக உள்ளன. நேற்று முன்தினம் இரவு 7 கடைகளில் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் ஹக்கீம் ரகுமான் என்பவரது செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த பணம் ₹8,000 மற்றும் ப்ளூடூத் போன், செல்போன் ஆகியவற்றைத் திருடியுள்ளனர். இக்கடை அருகில் உள்ள தியாகராஜன் என்பவருடைய நகை கடையில் 14 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு, அங்கிருந்த நகைகளை விட்டுச் சென்றுள்ளனர்.

 இதன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் எதிர்ப்பகுதியில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்தபோது, கூட்டுறவு வங்கி காவலாளி உமாபதி சத்தம் கேட்டு வெளியில் வர முயன்றபோது, காவலாளியை வங்கியின் உள்வைத்து பூட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். சிறிது தூரம் சென்று அசாருதீன் செல்போன் கடை மற்றும் சிவா என்பவரது ஜவுளி கடை, ராம் மெட்டல் பாத்திர கடை பூட்டையும் உடைத்து திருடியுள்ளனர்.

இதேபோல, சாலையூர் நாளோடு பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருடியுள்ளனர். திருடர்களில் மூன்று பேருக்கு மேல் தலையில் குல்லா அணிந்து முகம் தெரியாத வகையில் இருந்தனர் என இரவு காவலாளி உமாபதி தெரிவித்தார். திருடு நடந்த கடைகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேடசந்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் வியாபாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *