ஹிந்தி காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா காலமானார்

21 செப், 2022 – 11:14 IST

எழுத்தின் அளவு:


Hindi-Comedy-Actor-Raju-srivastav-no-more

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 59 காலமானார்.

ஹிந்தியில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராகவும், டி.வி.க்களிலும் நடித்து வந்தவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. கடந்த 10ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின.

ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஏறத்தாழ மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், சுயநினைவு இன்றி இருப்பதாகவும் தொடர்ந்து தகவல் வந்தது. இந்நிலையில் இன்று(செப்., 21) அவரது உயிர் பிரிந்தது.

1963ம் ஆண்டு டிச., 25ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் பிறந்த சத்ய பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா எனும் ராஜூ ஸ்ரீவஸ்தவா பாலிவுட்டில் ஆரம்பகாலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்கள் அவரை பிரபலமாக்கின. நிறைய டிவி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். குறிப்பாக தி கிரேட் இந்தியன் லாட்டர் சேலஞ்ச் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் இவரின் மறைவு ஹிந்தி ரசிகர்கள், திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவஸ்தவாவிற்கு ஷிகா என்ற மனைவியும், அந்தரா, ஆயுஸ்மான் என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.