கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கல்லூரியொன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு, கல்லூரி நிர்வாகம் நிர்வாகம் தடை விதித்ததையடுத்து எழுந்த எதிர்ப்புகளும், போராட்டங்களும் நாடளவில் பெரும் பேசுபொருளானது. உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றமே இதில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூற, இறுதியில் கல்லூரிகளுக்குள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஒருவாரமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த மனுக்கள்மீதான உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, கர்நாடக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜெனரல் பி.நவத்கி சில வாதங்களை முன்வைத்தார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற விசாரணை

உச்ச நீதிமன்ற விசாரணை

ஒவ்வொரு முறையும் பள்ளி நிர்வாகத்தில் ஒழுக்கத்தைக் கொண்டுவர முயற்சிக்கும்போது, ​​அடிப்படை உரிமைகளில் சில பகுதிகள் பாதிக்கப்படும்தான். இது குடிமகனுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான வழக்கு அல்ல. இது மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இடையிலான வழக்கு. இதில் அத்தியாவசிய மத நடைமுறைகள் ஏதும் நிறுவப்படவில்லை. அதேசமயம், அனைத்து நிலைகளிலும், தனியுரிமை குறித்தான உரிமையைப் பயன்படுத்த முடியாது” என வாதிட்டார்.

இதற்கிடையில், “யாராவது தங்களின் தலையை மூடிக்கொண்டால், அது எப்படி பொது ஒழுங்கை அல்லது ஒற்றுமையை மீறுகிறார்கள் என்பதாகும்?” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வியெழுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.