அம்பானியை முந்திய அதானி… ஒரு நாள் வருவாய் ரூ. 1,612 கோடி!

அதானி – அம்பானி

ந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாகவே உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துவருகிறார்.

இந்த நிலையில், உலகப் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததாக கடந்த வாரம் செய்திகள் பரபரத்த நிலையில், தற்போது இந்திய பணக்காரர்கள் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முதல் பணக்காரர்…

Hurun India என்ற பிரபல ஆய்வு நிறுவனம், IIFL Wealth என்ற செல்வ மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி,

* கவுதம் அதானி 10,94,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் இந்தியாவின் முதல் பணக்காரராக திகழ்வதாகவும்,

* அவருக்கு அடுத்தபடியாக முகேஷ் அம்பானி 7,94,700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு, இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு லட்சம் கோடி சந்தை மூலதனம்

“தனது சரக்கு வர்த்தக நிறுவனத்திலிருந்து நிலக்கரி, துறைமுகம் எரிசக்தி துறை எனப் பல துறைகளில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அதானி மட்டும்தான் ஒரு லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் கூடிய ஏழு நிறுவனங்களை உருவாக்கிய ஒரே இந்தியர் ஆவார்” என்று மேற்கூறிய பட்டியலை வெளியிட்டுப் பேசிய Hurun India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை ஆய்வாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைட் தெரிவித்தார்.

அதானி குழுமத்தில் தற்போது அம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசி நிறுவனமும் சேர்ந்துவிட்டதால், இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாள் வருவாய் ரூ. 1,612 கோடி

* 2021 ம் ஆண்டில், முகேஷ் அம்பானியைக் காட்டிலும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பின்தங்கி இருந்த அதானி, தற்போது அம்பானியை விட 3 லட்சம் கோடி ரூபாய் அதிகமான சொத்து மதிப்புகளுடன் முன்னணியில் உள்ளார்.

* அதானியின் மொத்த சொத்து மதிப்பு 10.94 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மேலும் அவர் கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு சுமார் 1,612 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

“2012 ஆம் ஆண்டில், அதானியின் சொத்து, அம்பானியின் சொத்து மதிப்பில் ஆறில் ஒரு பங்காக கூட இல்லை. அப்படியான ஒரு நிலையில், அவர் அடுத்த பத்தாண்டுகளில், அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் பணக்காரர் ஆவார் என்று அப்போது யாராலும் நினைத்தே பார்த்திருக்க முடியாது” என்று ஜுனைட் தெரிவித்தார்.

அதானி – அம்பானியிடம் 59 % சொத்துகள்

அதானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக அம்பானி உள்ள நிலையில், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் 59 சதவீதத்தை இவர்கள் இரண்டு பேரும் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த 5 ஆண்டுகளில் 15.4 மடங்கு சொத்து அதிகரித்த நிலையில், வினோத் சாந்திலால் அதானி & குடும்பம் 9.5 மடங்கு, ஷிவ் நாடார் & குடும்பம் 5 மடங்கு, ராதாகிஷன் தமானி & குடும்பத்தினரின் சொத்து 3.8 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கம் காட்டும் டெல்லி… அமித் ஷாவுக்கு எடப்பாடி அளித்த உத்தரவாதம்!

அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி

ருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியைப் பயன்படுத்தி தமிழகத்திலிருந்து கணிசமான இடங்களைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் டெல்லி பாஜக தலைமைக்கு, ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்வைத்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவு கவலையை ஏற்படுத்தி இருந்தது.

ஓ. பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தினகரனுடன் இணக்கமாக செல்லுமாறு பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்ட போதிலும், எடப்பாடி பழனிசாமிக்கு அதில் உடன்பாடில்லை என்பது, அவரது தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அவ்வப்போது அளித்த பேட்டி உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், சமீபத்தில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர், கட்சியில் ஒற்றைத் தலைமை ஏன் கொண்டுவரப்பட்டது என்பதை விளக்கியிருக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமையை குளிர்விக்கும் விதத்தில் எடப்பாடி தரப்பில் உத்தரவாதம் ஒன்று அளிக்கப்பட்டது. அது….

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

திமுக உட்கட்சித் தேர்தல்: நடக்கப்போகும் மாற்றங்கள் என்னென்ன?!

அண்ணா அறிவாலயம்

டந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது தி.மு.க உட்கட்சித் தேர்தல். ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம் என அத்தனை மட்டங்களிலும் தேர்தல் முடிந்துவிட, அவர்களுக்கெல்லாம் தலைமையான மாவட்டச் செயலாளர் தேர்தல் செப்டம்பர் 22 முதல் 24 வரையில் நடைபெறுகிறது.

இதில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட் முடிவில் மாற்றம்!

அசோக் கெலாட்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒருபக்கம் பரத் ஜோடோ யாத்திரை நடத்திக்கொண்டிருக்க, மறுபக்கம் காங்கிரஸில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளும் நடந்துகொண்டே வருகின்றன.

இந்த வேலைகள் தொடங்கப்பட்ட நாள் முதலே ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பதவிக்கு ஆர்வம் காட்டாமலிருந்தாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் `ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பதவியேற்கவேண்டும்’ என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் முதலில் ஆர்வம் காட்டாமல் இருந்துவந்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்…

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘யாரும் பசியில் வாடக்கூடாது!’ – துபாயில் இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம் அறிமுகம்!

vending machines

க்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் துபாயில், பிற நாடுகளில் இருந்து வந்து பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.

குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களைக் கழிக்கின்றனர்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்தார். இந்நிலையில்…

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

பொன்னியின் செல்வன்: எம்ஜிஆர், மகேந்திரன், அண்ணா… 72 வருடப் பயணத்தின் சுவாரஸ்யங்கள்!

பொன்னியின் செல்வன்

ல்கி 1954-ம் ஆண்டு மறைவதற்கு முன்பாக எழுதிய புகழ்பெற்ற நாவல் `பொன்னியின் செல்வன்’. தமிழில் `கல்ட்’ அந்தஸ்து பெற்ற படைப்பு. ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் அதிகம் விற்கும் நாவலாக அது இருந்தது.

பார்ட் 1, பார்ட் 2 என்று படம் எடுக்கும் பழக்கம் அறிமுகமாகாத அந்தக் காலத்திலேயே இதைப் படமாக்க முதலில் ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

1950-களில் ‘பொன்னியின் செல்வன்’ கதை ‘கல்கி’ வார இதழில் தொடராக வெளிவந்தபோதே அதன் வெற்றி எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. 1958-ம் ஆண்டு 10,000 ரூபாய் கொடுத்து ‘பொன்னியின் செல்வன்’ கதையின் உரிமையை வாங்கிய அவர், இயக்குநர் மகேந்திரனிடம் அதைத் திரைக்கதையாக…

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.