ஆவடி: ஆவடி துணை காவல் ஆணையர் அலுவலகம் எதிரே செல்போன் பறிப்பு நடந்துள்ளது. ஆவடி வசந்தன் நகர் கஜபதி தெருவை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (62). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 17ம் தேதி இரவு கடலூரில் இருந்து வசந்தன் நகரில் வசிக்கும் தனது மகளை பார்த்துவிட்டு, 19ம் தேதி ஆவடி துணை காவல் ஆணையரகம் அலுவலகம் எதிரில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3மர்ம நபர்கள் நாராயணன் வைத்திருந்த அவரது விலை உயர்ந்த செல்போனை அவரிடமிருந்து பறித்து அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். ஆவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சி மூலம் குற்றவாளிகளை தேடுகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.