மொஹாலியில் நடைபெற்ற  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தன் அபார பேட்டிங்கை காட்டினாலும் மோசமான பந்துவீச்சால் படுதோல்வி அடைந்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  6விக்கெட்டை இழந்து 208 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடி தொடக்க வீரர் ராகுல் 55 ரன்களை குவித்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டிய 30 பந்துகளில் 71 ரன்கள் குவிந்து இந்திய அணி 200 ரன்களை கடக்க உதவினார்.

இந்த நிலையில் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணி பந்துவீச்சை தும்சம் செய்தனர்.  முதன் முதலாக ஓப்பனிங் இறக்கப்பட்ட கேமரூன் கிரீன் பின்னி எடுத்து விட்டார். 26 பந்துகளில் அவர் 61 ரன்கள் மேத்யூ வேட் 21 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் நாட் அவுட். 19.2 ஓவர்களில் 211/6 என்று ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதனால் ராகுல் (55), சூரியகுமார் யாதவின் இன்னொரு மெஜஸ்டிக் இன்னிங்ஸ் (46 ரன் 2 பவுண்டரி 4 சிக்ஸ்), ஹர்திக் பாண்டியா (30 பந்தில் 71, 7 பவுண்டரி 5 சிக்ஸ்) ஆகியோரது அதிரடி பங்களிப்புகள் அனாவசியமாக வீணாகிப் போனது. காரணம், இந்திய அணியின் பவர் ப்ளே மற்றும் டெத் பவுலிங் படுமோசமானதே காரணம்.  இது போதாதென்று கிரீனுக்கு ஒரு கேட்சை அக்சர் படேல் விட, ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு கேட்சை கே.எல்.ராகுல் விட முக்கியக் கட்டத்தில் ஹர்ஷல் படேல் தன் சொந்த பவுலிங்கில் ஒரு கேட்சை விட்டார், இதோடு ஏகப்பட்ட மிஸ்பீல்டிங்குகளையும் இந்திய அணி செய்தது.

இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா டி20 லீக் ஏலம் : அதிரடி வீரர் ஸ்டப்ஸுக்கு அடித்தது லக்கி பிரைஸ்

ஆஸ்திரேலியாவின் 2வது அதிகபட்ச ரன் விரட்டலாகும் இது. புவனேஷ்வர் குமார் ஹர்ஷல் படேல் சேர்ந்து 8 ஓவர்களில் 101 ரன்களை கொடுத்து பாரி வள்ளல்களாயினர். உமேஷ் யாதவ் 2012-ல் டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமாகி இதுவரை 10 ஆண்டுகளில் 8 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார், திடீரென பும்ராவை உட்கார வைத்து விட்டு அவரை எடுத்ததன் பின்னணி என்ன? பும்ரா இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளாரா போன்ற கேள்விகள் எழுகின்றன.

இவர் வந்தார் கேமரூன் கிரீன் 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார். ஸ்பின் பவுலிங்கையும் வெளுத்துக் கட்டிய கிரீன் செஹலை 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். உமேஷ் யாதவ் கிரீனுக்கு ஒரு கடினமான கேட்சை விட்டார். பிறகு கிரீன் 42 ரன்களில் இருந்த போது டீப் மிட்விக்கெட்டில் கைக்கு வந்த கேட்சை அக்சர் படேல் விட்டார். பிறகு அக்சர் அதற்கு பிராயச்சித்தமாக கிரீன் விக்கெட்டை எடுப்பதற்குள் கிரீன் மேலும் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என்று 19 ரன்களை கூடுதலாகச் சேர்த்து விட்டார்.

இதையும் படிங்க: 10-12 பந்துகள்தான் ஆடுவார், அவரைப் போய்… – தினேஷ் கார்த்திக்கை சீண்டும் கம்பீர்!

முதலில் சரியாக வீசாத உமேஷ் யாதவ், ஒரே ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் (35) அதிரடி அபாய மன்னன் கிளென் மேக்ஸ்வெல் (1) வீட்டுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா 12 பந்துகளில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஜோஷ் இங்லிஸ் அக்சர் படேலின் அருமையான பந்துக்கு ரவுண்ட் த லெக்ஸில் பவுல்டு ஆனார்.  ஆஸ்திரேலியாவுக்கு 35 பந்துகளி 64 ரன்கள் தேவை என்ற நிலையில் புவனேஷ்வர் குமார் வைடுகளையும் புல்டாஸ்களையும் போட்டுக்கொடுத்தார், ஹர்ஷல் படேலின் ஸ்லோ பந்துகளை முன் கூட்டியே பார்த்து விட்டால் பந்து ஸ்டேடியத்துக்கு வெளியேதான், அங்குதான் பீல்டர்களை நிறுத்த வேண்டி வரும்.

18வது ஓவரில் 22 ரன்களைக் கொடுத்தார் ஹர்ஷல், 4 ஓவர் 49 ரன்கள். புவனேஷ்வர் 4 ஓவர் 52 ரன்கள் இருவரும் சேர்ந்து 101 ரன்களை 48 பந்தில் வாரி வழங்கினர். பீல்டிங் படுமோசம், டெத் பவுலிங் உலகக்கோப்பை நெருங்கும் சமயத்தில் புவனேஷ்வர் குமாரின் பலவீனங்கள் அம்பலமாகின்றன. ஹர்ஷல் படேல் சாத்துப்படி வாங்குகிறார். அக்சர் படேல் மட்டும்தான் சீராக வீசுகிறார். இன்னொரு பெரிய பலவீனம் ஹர்திக் பாண்டியா, இவர் 2 ஓவர்களில் 22 ரன்களைக் கொடுக்கிறார். இவருக்கு இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் போன்ற அணிகளுடன் பௌலிங் கொடுத்தால் போதும் என்றே தோன்றுகிறது.  மொத்தத்தில் முதல் போட்டியை தோற்றுவிட்டது இந்தியா, காரணம் மோசமான பந்து வீச்சு, மோசமான பீல்டிங்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.