Loading

மதுரைக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் தமிழக சுற்றுப்பயணம் பாஜகவினர் இடையே உத்வேகத்தை ஏற்படுத்தும், ஆ.ராசா பேசுவது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சொந்த தொகுதியிலேயே 90% மக்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தினரும் ஆ.ராசாவின் கருத்தை கண்டித்துள்ளனர். கண்டிப்பதற்கு யாரும் இல்லாத காரணத்தால் தி.மு.கவினர் ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுகிறார்கள். வெந்த புண்ணில் வேலினை பாச்சுகின்ற வகையில் மீண்டும் தான் பேசியது சரிதான் என்று வாதத்தை ஆ.ராசா முன் வைத்திருக்கிறார். சாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் இருந்தது கிடையாது.

 

அரசியல் நாகரீகத்தை ஆ.ராசா குறைத்துக் காட்டி வருகிறார். ஆ.ராசாவை எதிர்த்துப் பேசியவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கைது நடவடிக்கையை தி.மு.க., அரசு செய்து வருகிறது.  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியவர்கள் மீது புதிதாக காவல் துறையினரை வேலை செய்ய விடாமல் தடுத்ததாக இல்லாத, திமுக அரசு பொய்யான வழக்குகளை பாஜகவினர் மீது பதிவு செய்து கைது செய்கிறார்கள். ஆ.ராசா பேசியது எந்த ஒரு பாதிப்பையும் தமிழகத்தில் ஏற்படுத்தி விடுவது இல்லையாம் ஆனால், அவர் பேசியதை கண்டிக்கும் பாஜகவினரால் பாதிப்பு ஏற்படுகிறது என கூறுவது வேடிக்கையாக உள்ளது. 

 

ஆ.ராசா பேசியது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி அதை ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைப்போம். விநாயகர் சதுர்த்திக்கு முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தான் அரசு விடுமுறை அளித்துள்ளார். ஆனால் அவரை தலைவராக  போற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.  ஓணம் பண்டிகைக்கு அதிகாலை வேளையில் வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு இதுவரை வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை. மத அரசியல் செய்வது திமுக தான் பாஜகவினர் அல்ல. ஜாதியை வைத்து அரசியல் செய்த காலம் மலை ஏறிவிட்டது. அனைத்து சமுதாயத்தினரையும் மேலே கொண்டு வர செய்வது தான் அரசியல். ஒடுக்கப்பட்ட நபர்களை மேலே கொண்டு வர வேண்டும் என்றால் அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவினர் கொள்கை. 

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட வாசனை ஊ.பியில் அடிக்கிறது என்றெல்லாம் செய்தி வந்தது. இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என கூறியவர்கள் இதற்காக டெல்லி முதல்வரை அழைத்து வர வேண்டும். 

தமிழகத்தின் பள்ளி மாணவர்கள் போதையின் கையில் உள்ளனர். பஞ்சாயத்து தலைவரின் கணவர் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சென்று அடிக்கிறார். இது போன்ற செயல்கள் தமிழகத்தில் இதுவரை யாரும் பார்த்ததில்லை. அமைச்சர் மகன் ஆடம்பரம் கல்யாணம் குறித்து பேச வேண்டியது அவசியம் இல்லை., தமிழகத்தில் யாரெல்லாம் தன்னிடம் சொத்து இருக்கிறதோ என்று வெளிக்காட்டியவர்கள் இன்றைக்கு காணாமல் போய் இருக்கிறார்கள்.  மக்களிடம் சுரண்டி சேர்த்த சொத்துக்களை மக்களிடம் காண்பித்துக் கொள்வதற்காக இது போன்ற ஆடம்பர செயலில் ஈடுபட்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அதே போல் தான் அமைச்சரும் காணாமல் போவார்கள். பிரதமர் மோடி எங்கே நின்றாலும் அது மக்களுக்கு தான் பெருமை. மோடியின் பாராளுமன்ற தொகுதி எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்று பார்க்க வேண்டும்.  தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதிக்கு மிகப்பெரிய அங்கீகாரம். புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமனம் என்பது பொறுப்புக்கு தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

 

ராகுல் காந்தியின் யாத்திரை நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. செல்கின்ற இடமெல்லாம் பிரிவினைவாத சக்திகளை சந்திக்கிறார். கச்சத்தீவில் தாரை வார்த்த பிறகு தான் மீனவர்களுடைய பிரச்னை ஆரம்பித்தது. பாரதிய ஜனதாவை பொருத்தவரை கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிற்கு தமிழகத்திற்கு வரவேண்டும். சீமான் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவர் மாதம் மாதம்  பல்வேறு கருத்துக்களை மாற்றி மாற்றி கூறியுள்ளது புரியாத புதிராக உள்ளது. குழந்தைகளுக்கு தேன் மிட்டாய் வாங்குவதில் கூட ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் தான் ஜாதிய பாகுபாடு அதிகம் உள்ளது, இந்தியாவிலேயே ஜாதிய கொலை கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான்.

 

மின்கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர்

 

“50 ஆண்டுகள் கழித்து கருத்து கணிப்பு நடத்தினால், 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் எதுவென்று கேட்டால், மத்திய அரசு தான் மின் கட்டணத்தை உயர்த்த சொன்னார்கள் என்பதாக இருக்கும். மின்துறை அமைச்சர் 16 முறை கடிதம் எழுதியதாக கூறுகிறார், கடிதத்தை காண்பிக்க சொல்லுங்கள்” என்று கூறினார்.

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *