மதுரை ஆவினிலிருந்து விற்பனை செய்யப்பட்ட பாலில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மதுரை ஆவினிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு 40 வழித்தடங்களில் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் பால் வாங்கிய நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து பாலில் ஈ இருப்பது குறித்த வீடியோ எடுத்து நுகர்வோர் வெளியிட்டுள்ளார்.image

இதைத்தொடர்ந்து ஆவின் அதிகாரிகள் பால் பாக்கெட்டை திரும்பப் பெற்று விசாரணை நடத்தினர். அதன்முடிவில் பேக்கிங் செய்வதில்தான் தவறு நடந்திருப்பதாகவும் இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாது எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.