வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, மஹாராஷ்டிரா சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரேயை திடீரென சந்தித்து பேசியது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து, அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறினர். பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளனர்.

latest tamil news

சிவசேனா கட்சி , அதன் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என இரு தரப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், கட்சி யாருக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று குஜராத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, உத்தவ் தாக்ரேயை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.இருவர் சந்திப்பிலும் அரசியல் குறித்து தான் பேசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதானி, உத்தவ் சந்திப்பு மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் அம்மாநில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டில்லி பறந்தார் ஷிண்டே

இதற்கிடையே மஹாராஷ்டிரா முதல்வரும் அதிருப்தி சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இன்று திடீரென டில்லி புறப்பட்டார். அங்கு அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.