மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை வாங்கியதாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸை குற்றவாளியாகச் சேர்த்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவும், டெல்லி போலீஸாரும் தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றும் டெல்லி போலீஸாரிடம் ஜாக்குலின் விசாரணைக்கு ஆஜரானார். சுகேஷ் சந்திரசேகர் குற்றப்பின்னணி கொண்டவர் என்று தெரிந்த பிறகு அவருடன் தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்பில் இருந்ததாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் சுகேஷிடம் பரிசு வாங்கிய மற்றொரு நடிகையான நோரா பதேஹி சுகேஷின் குற்றப்பின்னணி குறித்து தெரிந்ததும் அவரிடமிருந்து விலகிவிட்டார். ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு சுகேஷுடன் ஏற்பட்டுள்ள நெருக்கம் காரணமாக அவரை பாலிவுட்டில் முக்கிய பிரபலங்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜாக்குலின்

ஜாக்குலின்

ஜாக்குலின் ஆரம்பத்தில் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் விருபப்பட்ட நடிகையாக இருந்தார். கடைசியாக சல்மான் கான் துபாயில் நிகழ்ச்சி நடத்திய போது ஜாக்குலின் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட இருந்த நேரத்தில் அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வெளிநாடு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். சல்மான் கான் மட்டுமல்லாது நடிகர் அக்‌ஷய் குமாரும் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷிடமிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இரண்டு முக்கிய நடிகர்கள் சொல்லியும் ஜாக்குலின் சுகேஷ் மீது கொண்டிருந்த காதல் காரணமாக அவரை விட்டு விலகாமல் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெயாகியிருக்கின்றன. தான் சுகேஷ் சந்திரசேகரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், சுகேஷ் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என நடிகர் சல்மான் கான் மற்றும் அக்‌ஷய் குமாரிடம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.