திருவொற்றியூர்: புளி விற்பது போல் நடித்து கஞ்சா விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக  திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் முகமது இர்பான் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் காதர் மீரான் தலைமையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் தெருத் தெருவாக சென்று புளி விற்பனை செய்த ஒருவரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர் வாகனத்தில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த  குணசேகரன் (48) என்பதும், ஆந்திர மாநிலம் அன்னாவரத்தில் இருந்து காஞ்சாவை கடத்தி வந்து, வடசென்னை பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 4 கிலோ 850 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.