சென்னை: வீட்டின் குளியல் அறையில் செல்போன் வைத்து பெண்கள் குளிப்பதை படம் பிடித்த இரண்டு வாலிபர்களை போலீசார்  கைது செய்துள்ளனர். இணையதளத்தில் விற்பதற்காக இந்த செயலில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் செல்போனி எடுத்து அழித்த 100க்கும்  மேற்பட்ட குளியல் வீடியோக்கள் ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரி, நர்மதா தெருவில் ஒரு வீட்டில் நிறைய பெண்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள பாத்ரூம் அருகே நேற்று காலை சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், பெண்கள் குடியிருக்கும் வீட்டின் அருகே என்ன வேலை என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 2 வாலிபர்களும் பதற்றத்துடன் பேசியது மட்டுமல்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அதில் ஒருவர், தன்னிடம் இருந்த செல்போனை பொதுமக்கள் பறிப்பதற்குள், அதில் உள்ள படங்கள், வீடியோக்களை அழித்தார். இதனால், பொதுமக்களுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. உடனே அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு வேளச்சேரி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  வந்து பொதுமக்கள் பிடியில் இருந்து இரண்டு வாலிபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் கவனித்தனர். அதில், அவர்கள் வேளச்சேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (38), ஸ்ரீராம் (29) என்று தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த செல்போனை போலீசார் வாங்கி படங்கள், வீடியோ பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.

ஆனால், அதுபோல எதுவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக, ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் செல்போனில் இருந்த வீடியோ, படங்களை திரும்ப எடுத்தனர். அப்போது அதில்  பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் 100க்கும் மேலாக இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த வீடியோக்களை இணையதளத்துக்கு விற்கவும், தனிமையில் இருக்கும்போது பார்த்து ரசிக்கவும் எடுத்ததாக வாலிபர்கள் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வாலிபர்கள் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு சென்று வீடுகளில் செல்போனை ரகசியமாக வைத்து பதிவு செய்துள்ளனர்.  இதையடுத்து, வெங்கடேசன், ஸ்ரீராம் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.