புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது சமத்துவ கொள்கைக்குள் வகைப்படுத்த முடியாது,’  என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய  அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘அரசியல் சாசன பிரிவு 14, சமத்துவத்தை வலியுறுத்துகிறது.

இந்திரா சாவ்னி  வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராகவும் உள்ளது. குறிப்பாக, அளவுகோலின் அடிப்படையில் இடஒதுக்கீடுகளை கொண்டு வருவது அரசியல் சாசனத்தை வெளிப்படையாக மீறும் செயல் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளமால், இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது. எனவே, இந்திரா சாவ்ணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அது சாத்தியமற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, சமத்துவத்துக்கு எதிரானது,’ என்றும் நாப்தே தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.