Loading

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் அசோக் கெலாட்டின் வழிகாட்டுதல்படி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி, ராகுல்காந்தியே தலைவராக வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில், அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடவேண்டும் என்று சோனியாகாந்தி விரும்புவதால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி தெலங்கானா, மற்றும் பீகார் மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள், ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. பிற மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் இத்தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன.

image

இதனால், ராகுல்காந்தியைத் தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சசி தரூர் அல்லது அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் சார்பாக வேறு யாரேனும் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் “பாரத் ஜோடோ” பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி வரும் ராகுல்காந்தி கட்சி தலைவர் பதவியை மீண்டும் ஏற்க இதுவரை ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இதனால்தான் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விசுவாசியான அசோக் கெலாட் வருவது சரியாக இருக்கும் என சோனியாகாந்தி கருதுவதாக விளக்கமளிக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/hKHobGIcImE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் காந்தி குடும்பத்தின் பிரதிநிதியாகவே இருப்பார் எனவும், போட்டியின்றி ஒரு மனதாக அடுத்த தலைவர் தேர்வு நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

– கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *