வண்ணாரப்பேட்டை: சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையை சேர்ந்தவர் டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 11 வயது  மற்றும்  7 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, போதையில் வந்த ஒரு வாலிபர், சிறுமிகளிடம் தவறாக நடந்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமிகள் அலறி கூச்சலிட்டதால், உறவினர்கள் பெற்றோர் ஓடிவந்து, அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கி ராயபுரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலம்  துர்கா பூரை சேர்ந்த சஞ்சய் பெகரா (23), என்பது தெரியவந்தது அதையடுத்து ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.