Loading

லண்டன்: இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து பிளாட்டினம் விழா கொண்டாடி சாதனை படைத்தவர் ராணி 2-ம் எலிசபெத் (96). இவரது உடலுக்கு கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் முர்முவுடன் இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் (பொறுப்பு) சுஜித் கோஷ் கலந்துகொண்டார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் அரசர் நருஹிடோ, பஹ்ரைன் பிரதமர் சல்மான் பின் ஹமத் அல் கலீபா உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமார் 500 உலகத் தலைவர்கள் இதில் பங்கேற்றதாகத் தெரியவந்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *