உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு கழிப்பறையில் வைத்து பரிமாறப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16-ஆம் தேதி ஷஹரன்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அப்போது விளையாட்டு வீரர்களுக்கு சரியாக வேகாத உணவு வழங்கப்பட்டதாகவும், உணவு கழிப்பறையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் தங்களுக்கு உணவு வழங்கப்படுவதாக வீரர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கிருந்த கழிப்பறைக்கு மிக அருகே ஒரு பேப்பரில் பூரிகள் கிடந்தது. மேலும் கழிப்பறையிலேயே விளையாட்டு வீரர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, தற்போது அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த, மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.