புதுச்சேரி : புதுச்சேரியில் இடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி, உருளையன்பேட்டையை சேர்ந்தவர் செல்வம். சுயேச்சை எம்.எல்.ஏ., நேருவின் ஆதரவாளர். அதே தொகுதியை சேர்ந்தவர் கோபால். தி.மு.க., தொகுதி பொறுப்பாளர்.இருவரும், புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை, அந்தோணியர் ஆலயம் அருகில் இரு சக்கர வாகன பாதுகாப்பு நிலையங்களை அருகருகே நடத்தி வந்தனர்.கோபால் நடத்திவந்த இருசக்கர வாகன பாதுகாப்பு நிலையத்தை கடந்தாண்டு மூடிவிட்டார்
தனது இடத்தின் ஒரு பகுதியை, செல்வம் ஆக்கிரமித்து உள்ளதாக, கோபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கில், இடத்தை கையகப்படுத்திக் கொள்ள தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், இடத்தை காலி செய்து தருமாறு கோபால், செல்வத்திடம் கூறி வந்தார். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று கோபால், தனது இடத்தை அளவீடு செய்து, மதில் சுவர் கட்டுவதற்கு, தனது ஆதரவாளருடன், செல்வத்தின் இருசக்கர வாகன பாதுகாப்பு நிலையத்திற்குள் சென்றார்.அவர்களை, செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்ததால், மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.தகவலறிந்த நேரு எம்.எல்.ஏ., உருளையன் பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விரைந்து சென்று, இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இடத்தை கையகப்படுத்த நீதிமன்ற உத்தரவுடன் வந்தால், ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.நகரின் பிரதான சாலையில் எம்.எல்.ஏ., ஆதரவாளர்களும், தி.மு.க.,வினரும் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.