இதற்குப் பதில் சொல்லும் வகையில், ஆகஸ்டு 5-ம் தேதி தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து, யானை தாக்கப்பட்டதா, தற்போது யானையின் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாகத் தமிழக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில், அசாமைச் சேர்ந்த வனப் பாதுகாவலர் ஒருவர், அசாம் மாநில அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பெண்யானையை மீண்டும் அஸ்ஸாமிற்கே கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகத் தகவல் சொல்லப்படுகிறது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் உத்தரவின்படி அசாம் வனப் பாதுகாவலர் ஹித்தேஷ் மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் அபர்ணா நடராஜன், வன உயிரின பேராசிரியர் கே.கே.ஷர்மா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த துணை வனப் பாதுகாவலர் நாகநாதன் உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் யானை ஜெயமால்யதாவை மீண்டும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.