காரைக்குடி அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் 55 வயதான நாகப்பன். இவரது மகள் ராக்கம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரது மகன் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

image

இந்நிலையில், தனது மகள் ராக்கம்மாளை பார்ப்பதற்காக நாகப்பன் மருமகன் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாமனாருக்கும், மருமகனுக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தனது வீட்டில் இருந்த குருவி சுடும் ஏர் கன் ரக துப்பாக்கியை எடுத்து நாகப்பனை சுட்டுள்ளார்.

image

இதில், பலத்த காயமடைந்த நாகப்பன், காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்பு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட ராமச்சந்திரன் தப்பியோடிய நிலையில், சம்பவம் குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.