திருத்தணி: திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில், கனகம்மாசத்திரம் போலீஸ் எஸ்ஐ பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் ஆற்காடுகுப்பம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு ஆட்டோவை சோதனைசெய்ததில், ஆட்டோவில் ஒரு டன் அரிசி கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, திருவாலங்காடு பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்த பிரசன்னகுமாரை (30) கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் பிரசன்னகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.