பள்ளிப்பட்டு: தமிழகத்தில் மணல் விலை அதிகமாக உள்ளது.  ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மணல் விலை அதிகரித்துள்ளது .  எம்சாண்ட் மணலும் விற்கப்படுகிறது. இந்நிலையில்திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவிலிருந்து டிராக்டரில் தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற மணல் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்  பாலசமுத்திரம் மண்டல் மித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த  சேகர் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.