முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ரோட் சேஃப்டி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

 

இந்நிலையில் இன்று இந்திய லெஜண்ட்ஸ் அணி நியூசிலாந்து லெஜண்டஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது சச்சின் டெண்டுல்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக இன்றைய போட்டியில் ஆடிய ஷாட்கள் சில மீண்டும் பழைய டெண்டுல்கரை பார்ப்பது போல் அமைந்தது. குறிப்பாக பேக் ஃபுட் டிரைவ் மற்றும் அவருடைய லேப் ஷாட் ஆகியவை சிறப்பாக அமைந்தது. 

 

இன்றைய போட்டியில் சச்சின் அடித்த ஷாட்களை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் இந்த வயதிலும் சச்சின் டெண்டுல்கர் இப்படி ஷாட் ஆடி கொண்டு வருகிறார் என்பது போல கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

 

 

 

 

 

 

இந்தப் போட்டியில் இந்திய அணி 5.5 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்தப் போது மழை குறுக்கிட்டது. இதன்காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.