வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: வரப்போகும் லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலத்தில் பூல்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடப்போவதாக வந்த செய்தியை நிதிஷ் குமார் மறுத்துள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் தீவிரம் காட்டி வருகிறார். இது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

latest tamil news

இந்நிலையில் உபி. மாநிலம் பூல்பூர் லோக்சபா தொகுதியில் நிதிஷ் போட்டியிட வேண்டும் என உபி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் வலியுறுத்தினார். இது குறித்து நிதிஷ் அளித்த பேட்டியில் பூல்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. அப்படி ஒரு எண்ணமும் இல்லை. எதிர் வரும் லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைப்பதில் தான் எனது ஆர்வத்தை காட்டி வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.