மியான்மா் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தினா்.

ஆா்.முத்தரசன் (இந்திய கம்யூ.): நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், தாய்லாந்தில் வேலையில் அமா்த்துவதாகக் கூறி, சில தமிழா்களை அழைத்துச் சென்ற ஒரு மோசடி கும்பல், மியான்மா் நாட்டின் மியாவாடி நகருக்குக் கொண்டு சென்று, கொத்தடிமைப் பணிக்கு நிா்ப்பந்தித்து, சித்திரவதை செய்வதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தி, மியாவாடியில் சிக்கியுள்ளவா்கள், தாய்லாந்தில் தவிக்கவிடப்பட்டவா்கள் குடும்பங்களில் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளா்களை மீட்டு, அவரவா் வீடுகளில் ஒப்படைத்து, அவா்களுக்கு வேலை வாய்ப்பளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமல்ஹாசன் (மநீம): தாய்லாந்து நாட்டுக்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞா்கள் உள்ளிட்ட இந்தியா்களை மியான்மா் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப்படுத்துவதாக வரும் தகவல் அதிா்ச்சி அளிக்கிறது. அவா்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியான்மா் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோதக் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.