1949-ம் ஆண்டு ஏற்பட்ட சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாகச் செயல்பட்டுவருகிறது. ஆனால், தைவானைத் தங்கள் நாட்டின் ஓர் அங்கமாக சீனா கருதிவருகிறது. இந்த நிலையில், “தைவானை எங்கள் நாட்டுடன் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக்கொள்வோம்” என சீன அதிபர் பேசிவருகிறார். இதையடுத்து எந்தத் தலைவர் தைவானுக்குச் சென்று வந்தாலும் அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துவருகிறது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்குச் சென்று வந்தார். இதனால் கோபமடைந்த சீனா, தைவானைச் சுற்றிவளைத்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பதற்றம் நிலவிவருகிறது.

ஜோ பைடன்

ஜோ பைடன்
ட்விட்டர்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று சி.பி.எஸ் நியூஸின் நேர்காணலில் இது தொடர்பாகப் பேசியிருக்கிறார். அதில் அவர், “தைவான்மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும். உக்ரைனில் இருப்பதைப்போல இல்லாமல், தைவான்மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், அமெரிக்கப் படை வீரர்கள், தைவானைப் பாதுகாப்பார்கள்” என சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும்விதமாகக் கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.