ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டியின், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருப்பதை தொடர்ந்து கவுதம் கம்பீர் அவரது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்களா இல்லை யாராவது ஒருவர் மட்டும்தான் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை. இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.

இடது கை பேட்டர் என்ற ஒரு ஃபேன்சி கருத்தினால் ரிஷப் பண்ட்டிற்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது. இந்திய அணியில் தற்போது இடம்பெறக்கூடிய வாய்ப்புள்ள மற்ற இடது கை வீரர்கள் யாரும் இல்லை என்பதும் கவனத்துக்குரியது. இந்த உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ALSO READ | விராட் கோலியை நோக்கி ஏகப்பட்ட பவுன்சர்கள்.. சதம் அடித்து மீண்டும் சாதிப்பாரா?

இந்நிலையில் இது குறித்து பேசிய கவுதம் கம்பீர் மீண்டும் தினேஷ் கார்த்திக்கை சீண்டியுள்ளார். “ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் சேர்த்து அணியில் ஆடவைக்க முடியாது. அப்படி செய்தால் ஆறாவது பந்துவீச்சாளரை இழக்க நேரிடும். உலக கோப்பை மாதிரியான பெரிய தொடருக்கு ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாமல் போக முடியாது. இருவரையும் அணிக்குள் ஆட வைக்க வேண்டுமென்றால் சூர்யகுமார், ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கி விட்டு ரிஷப் பண்ட்டை  தொடக்க வீரராக களம் இறக்கலாம். வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்.தினேஷ் கார்த்திக் மேல்வரிசையில் இறங்க விரும்புவதில்லை. ஆனால் எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதி ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. என்னை பொறுத்தமட்டில் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்கவேண்டும்” என்றார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *