இந்த நடவடிக்கைகளால் அதிர்ந்துபோன அனிதா, சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறையின் வழக்கை ரத்துசெய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இருந்தபோதிலும், இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

அப்போது, அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிட்டனர். இந்நிலையில், ரூ. 6.5 கோடி மதிப்பிலான அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறையின் வட்டாரத்தில் விசாரித்தபோது, “அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவுசெய்த நாளிலிருந்து விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், குற்றச்சாட்டுக்கான சரியான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கவில்லை. இந்நிலையில்தான், குற்றச்சாட்டை உறுதி செய்யும் அளவுக்கு சில ஆதாரங்கள் சிக்கின. அதேபோல, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கால் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியிருக்கிறது. அதன்படிதான், ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியிருக்கிறோம். இது குறித்து முறையான விளக்கத்தை அவர் மேற்கொள்ளவில்லையென்றால் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்” என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.