ஆவடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெளிநாட்டு இன்ஜினியர் போக்சோவில்  கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் வசிப்பவர் வடிவேலு (38) இவரது உறவினர் கோவிந்தராஜன் (38). இவர் வெளிநாட்டில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக கடந்த ஜூலை மாதம் வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று மாலை வடிவேலுவின் மகளுடன் பக்கத்து வீட்டுச்சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அண்ணன் மகளை மாடிக்கு அனுப்பிவிட்டு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி பெற்றோர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். கோவிந்தராஜனை போக்சோவில் கைது செய்து, ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கோவிந்தராஜனை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.