Last Updated : 19 Sep, 2022 08:52 PM
Published : 19 Sep 2022 08:52 PM
Last Updated : 19 Sep 2022 08:52 PM

மொகாலி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக். அதனை ரசிகர்கள் லைக் செய்வது, கமெண்ட் செய்வது மற்றும் பகிர்வது என மிகவும் மும்முரமாக உள்ளனர்.
37 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த முறை தொடர்ச்சியாக பல்வேறு டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் அவர் தவறாமல் இடம்பெற்று இருந்தார். அதன் பலனாக அடுத்த மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் புதிய வெளிர் நீல வண்ணத்திலான ஜெர்சி நேற்று வெளியிடப்பட்டது. அதையடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அந்த ஜெர்சியை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தினேஷ் கார்த்திக்கும் புதிய ஜெர்சி அணிந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டார். அதை தான் இப்போது அவர் பகிர்ந்துள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
“நான் முன்னுக்கு வர்றது தான் உனக்கு பிரச்சனைனா நான் முன்னுக்கு வருவேன்டா. கோட் சூட் போடுவேன் டா. கால் மேல கால் போட்டு உக்காருவேன் டா. ஸ்டைலா. கெத்தா” என உக்கிரமாக பேசும் கபாலி வசனத்தை நினைவு படுத்தும் வகையில் தினேஷ் கார்த்திக்கின் இந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
I’m Blue
New threads. Fresh energy pic.twitter.com/6kFtsdBYTU
தவறவிடாதீர்!