பெரம்பூர்: எம்கேபி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் முல்லை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முல்லை நகர் சுடுகாடு அருகே மறைவான இடத்தில் இருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், வியாசர்பாடி கல்யாணபுரம் 2வது தெருவை  சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி விக்ரம் (36) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.