சென்னை: நடிகை பவுலினா தற்கொலையில் திடீர் திருப்பமாக, சினிமா இயக்குநர் ஒருவர் ‘நடிகை பவுலினாவை தனது புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி, நெருக்கமாக இருந்து ஏமாற்றி விட்டதால் தான் தற்கொலை முடிவுக்கு நடிககை சென்றாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலம் சத்தியவேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பவுலின் ஜெசிகா(எ) தீபா(29). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை விருகம்பாக்கத்தில் தங்கி சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார். இதனால், நடிகை ஜெசிகாவுக்கு ‘ராட்சசன், தெறி, துப்பறிவாளன் போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில், அவர் ‘வாய்தா’ படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தார். கதாநாயகியாக நடிக்க பல இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்தார். இதற்கிடையே, சனிக்கிழமை நடிகை ஜெசிகா தன் வீட்டு ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடிகையின் அறையில் இருந்து கிடைத்த கடிதத்தில் ‘நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். எனது காதல் கைக்கூடவில்லை. அதனால், இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்தது. பின்னர், போலீசார் நடிகை ஜெசிகா தற்கொலை சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஜெசிகா தற்கொலை குறித்து போலீசார் கூறியதாவது: நடிகை ஜெசிகா சென்னையில் தனியாக வசித்து வந்தாலும், பணம், அரசியல், சமூக அந்தஸ்து கொண்ட நபர்களுடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். ஜெசிகா, இயக்குநர் ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். எனினும், அந்த இயக்குநர் தன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் ஜெசிகாவிடம் உன்னை ஹீரோயினாக வைத்து புதிய படம் ஒன்று எடுப்பேன் என்று ஆசையை தூண்டியுள்ளார்.
புதுப்படத்தின் நடிகை என்பதால், பல இடங்களுக்கு அந்த இயக்குநருடன் அவர் சென்று வந்துள்ளார். தன் மீது இயக்குநர் மிகுந்த அன்பாக இருந்ததால், நடிகை ஜெசிகா, இயக்குநரை காதலிக்க தொடங்கினார்.

இதனால், இயக்குநர் எப்போது, எங்கு அழைத்தாலும் ஜெசிகா அவரை சந்திக்க சென்றுவிடுவாராம். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இயக்குனர் தன் காதலை ஜெசிகாவிடம் வெளிப்படுத்தினார். இதை நடிகையும் ஏற்றுக் கொண்டாராம். இவர்கள் ஜாலியாக இருந்த படங்கள், வீடியோ, சுற்றுலா சென்ற பல்வேறு ஆதாரங்கள் போலீசாரிடம் கிடைத்துள்ளது. இதையடுத்து நடிகை ஜெசிகா, இயக்குநரிடம் தன்னை 2வது திருமணம் செய்து கொள்ளும் படி வலியுறுத்தினாராம். ஆனால், அதற்கு இயக்குனர் எனக்கு குழந்தைகள் உள்ளனர். நாம் லிவிங் டூ கெதரில் வாழலாம் என்று திருமணத்தை தட்டி கழித்துள்ளாராம்.

ஆனால், அதை ஏற்க ஜெசிகா மறுத்துவிட்டாராம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது இயக்குநரை சந்தித்துவிட்டு மதியம் 1.11 மணிக்கு தனது வீட்டிற்கு நடிகை ஜெசிகா வந்துள்ளார். அப்போது அவருடன் போனில் திருமணம் குறித்து பேசியபோது 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு நடிகை அன்று இரவு பலமுறை இயக்குநரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அது தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு தான், இயக்குநருக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று ‘குறுஞ்செய்தி’ ஒன்று அனுப்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட நடிகை 3 செல்போன்கள் பயன்படுத்தி வந்ததாக அவரது சகோதரர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதில் சினிமா வட்டாரத்திற்கு மட்டும் பயன்படுத்தும் ஐ-போன் மட்டும் மாயமாகி உள்ளது. அந்த ஐ-போனை கண்டுபிடித்தால் எனது தங்கை சாவுக்கு காரணம் என்ன என்று தெரியும் என புகார் அளித்துள்ளார்.

அதன்படி நாங்கள் மாயமான ஐ-போன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்பு வெகுநேரம் ஜெசிகா இயக்குநருடன் தான் பேசி உள்ளார். இதனால் நடிகை ஜெசிகா தற்கொலைக்கு வழக்கில் எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து பார்த்தால் இயக்குநருக்கு அதிக தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, நடிகை ஜெசிகா தற்கொலை குறித்து இயக்குநரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் தற்போது கரைக்குடியில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது நடிகை வீட்டிற்கு வந்த இயக்குநரின் நண்பரிடமும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணை முடிந்த பிறகு தான் நடிகை ஜெசிகா தற்கொலைக்கு யார் காரணம் என்று தெரியவரும்”. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* நடிகை ஜெசிகாவின் கடைசி காட்சிகள்
நடிகை ஜெசிகா தற்கொலையில் மர்மம் நீடிப்பதால் போலீசார் அவர் வசித்து வந்த குடியிருப்பு வீட்டின் சிசிடிவி காட்சிகளை எடுத்து விசாரணை நடத்தினர். அதில், நடிகை ஜெசிகா கடைசியாக கடந்த 16ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியே சென்று விட்டு மகிழ்ச்சியாக தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல ஆட்டோவில் இருந்து இறங்கி மதியம் 1.11 மணிக்கு படிக்கட்டில் ஏறினார். அதன் பிறகு அவர் தனது வீட்டில் இருந்து பிணமாக தான் கொண்டு வரப்பட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.