டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவை பைக்கில் அமரவைத்து அதிவேகமாக ஓட்டிச்சென்று வீடியோவை யூடியூபில் பதிவேற்றிய TTF வாசன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Twin Throttlers என்ற யூ டியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவது வழக்கம். அதுமட்டுமின்றி, பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது போன்றவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார். சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர்மீது புகார் உள்ளது.

இந்நிலையில், யூடியூபர் TTF வாசன் ஆபத்தான முறையில், வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி, ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ நேற்று இணையங்களில் பரவி வைரலானது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் செல்லும் பைக்கின் வேகம் காண்போரையும் பதைபதைக்க வைத்தது.

image

இந்த ஆபத்தான அதிவேக பயணத்தின்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் வரும் மற்றவர்களையும் அச்சுறுத்தும் வகையில் வீயூஸ்களை அதிகரிப்பதற்காக இவ்வாறு அதிவேகப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். 

இந்நிலையில், கோவை பாலக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய யூடியூபர் TTF வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய சட்டப்பிரிவுகள் 279, 184 MV act இன் கோவை மாநகர காவல் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *