திருவள்ளூர்,: திருவள்ளூர் அருகே பூங்கா நகரில் வீட்டின் கதவை உடைத்து பைக், டிவி. கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருவள்ளூர் அடுத்த பூங்காநகர் ஆவாரம் பூ தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரின் மனைவி சங்கீதா (31). இவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரு தினங்களுக்கு முன் அனுமதித்தனர். அன்றைய தினம் இரவு மருத்துவமனையில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை சங்கீதாவின் தம்பி கதிரவன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மற்றும் டி.வி, கால் சவரன் தங்க கம்பல், 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.