புதுடில்லி, காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்து கடந்த ஆண்டு விலகியவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான கேப்டன் அமரீந்தர் சிங், பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளான ஏழு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி., ஆகியோரும் பா.ஜ.,வில் சேர்ந்தனர்.

பஞ்சாப் மாநில முதல்வராக காங்கிரஸ் சார்பில் பதவி வகித்தவர் கேப்டன் அமரீந்தர் சிங், 80. கடந்த 1980 முதல் காங்கிரஸ் கட்சியில் தீவிர பணியாற்றிய இவர், பஞ்சாப் மாநில முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தார். கடந்த ஆண்டு கட்சி தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி, கட்சியில் இருந்தும் விலகினார்.

இதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, தலைநகர் புதுடில்லியில் நேற்று சந்தித்த அமரீந்தர் சிங், பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளாக ஏழு முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி., ஆகியோரும் பா.ஜ.,வில் சேர்ந்தனர். பஞ்சாப் லோக் காங்கிரஸ், பா.ஜ.,வுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.