தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் நடவடிக்கை : துல்கர் சல்மான் எச்சரிக்கை

19 செப், 2022 – 12:32 IST

எழுத்தின் அளவு:


Dulquer-salmaan-gave-warnning

மலையாள நடிகர் துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்து பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள சுப் படத்தில் நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. திரைப்படங்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை கொலை செய்து அவர்கள் உடம்பில் ஸ்டார் பதிக்கும் த்ரில்லர் கதை.

மும்பையில் நடந்த இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் துல்கர் சல்மான் பேசியதாவது: சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் திரைப்படங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அதுவும் முன்னணி நடிகர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் மிக மோசமான தோல்வியை சந்திக்கின்றன.

என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை பதிவு செய்து வைத்துள்ளேன். அந்த பதிவுகளை பதிவிட்ட ஐடிக்கள் எனக்கு நன்றாக தெரியும். நடிகர் மீதான விமர்சனங்கள் புதிதல்ல. ஆனால் வரம்பு மீறி செல்லும்போது அதை நான் எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையில் நடிகர்களை விமர்சிப்பதும், ட்ரோல் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.