ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் செயல்படும் தனியார் பள்ளியில்  மாணவன் ஒருவனை ஆசிரியர் அடித்து உதைத்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவின் பென்ஸ் சர்கிள் என்ற பகுதியில் இந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

பள்ளியில் ஆசிரியர்  பாடம் எடுக்கும்போது ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் தனது செல்போனுடன் இயர்போனை இணைத்து அதன் மூலம் பாட்டு கேட்டு கொண்டிருந்துள்ளார். இதை ஆசிரியரும் கவனித்து விட்டார்.  மாணவரின் செயலால் கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனின் இருக்கை அருகே வந்து கன்னத்தில் அறைய தொடங்கினார்.

அத்தோடு நிற்காமல் சக மாணவர்கள் முன்னிலையில் ஆத்திரத்துடன் மாணவனை உதைத்து தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை சக மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். ஆசிரியர் மாணவனை சரிமாரியாக தாக்கும் காட்சிகள்  சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு மாணவர் சங்கங்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தன.

இதையும் படிங்க: திருமணமான பெண்ணை வீடு புகுந்து கழுத்தறுத்த எம்எல்ஏவின் உதவியாளர்… தெலங்கானாவில் பரபரப்பு

தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர், அதிகாரிகள் ஆகியோர் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.