திருவிடைமருதுார் : திருவிடைமருதூர் அருகே கணவன், மனைவி போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவிடைமருதுார் அடுத்துள்ள முத்துபிள்ளைமண்டபம், முல்லை நகரில் வசிப்பவர் பத்மநாபன் மகன் கவுதம் (22). இவருக்கும், கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கவுதம், சரவணனை, திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தனது நண்பரான பழவாத்தான்கட்டளை விவேகானந்தா நகரில் வசிக்கும் பவுல்ராஜ் மகன் ஜோஸ்வாவுடன் (22) சேர்ந்து, கவுதம் மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலிருந்து பதிவிறக்கம் செய்தனர். பின்னர் ஆபாசமாக சித்தரித்து நண்பர்களின் செல்போன்களின் வாட்ஸ்ஆப்களில் பதிவேற்றம் செய்தனர். மேலும் இணைய தளத்தில் வெளியிடாமல் இருக்கப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம் இதுகுறித்து நாச்சியார்கோயில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் ஜோஸ்வா மற்றும் சரவணன் ஆகிய 2 பேரின் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.