திருவாரூர்: திருவாரூர் அருகே அகரதிருநல்லூரை சேர்ந்த 5-வது படித்து வரும் அரசு பள்ளி மாணவர் ஒருவர் மற்றும் மன்னார்குடி கீழமூன்றாம் தெருவை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் என 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், பன்றி காய்ச்சல் உறுதி செய்யபட்ட இருவரும் அவர்களது வீடுகளிலேயே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த காய்ச்சல் நோய்க்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் என்பது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் காய்ச்சல் தான். இதற்கு தொடர்ந்து 2 முதல் 3 நாட்கள் வரை மருந்து, மாத்திரை எடுத்து கொள்ளும்பட்சத்தில் நோய் குணமாகும். எனவே பொதுமக்கள் இந்த காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.