Loading

ரயில் நிலையங்களில் வாகன காப்பகங்கள் பராமரிப்பு, விளம்பரங்கள் செய்வது, கழிப்பறை பராமரிப்பு, தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் அமைப்பது, ரயில்களில் பார்சல் போக்குவரத்து போன்ற சேவைகளுக்கு ரயில்வே வர்த்தக பிரிவு ஒப்பந்ததாரர்களை நியமித்து வருகிறது. நேர்மையான வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்தங்களை கையாள தற்போது ரயில்வேயில் மின்னணு ஏலம் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

இதற்காக ஒப்பந்ததாரர்கள்  www.ireps.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதள வாயிலாக என்னென்ன ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.  மதுரை கோட்டத்தில் மேற்கண்ட சேவைகளுக்கு ஒப்பந்தங்கள் மின்னணு ஏல முறையில் கோரப்பட்டிருந்தது. இதில் 12 வாகன காப்பக ஒப்பந்தங்கள், 30  விளம்பர ஒப்பந்தங்கள், 3 ரயில்களில் பார்சல் போக்குவரத்திற்காக ஒப்பந்ததாரர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

 

இதன் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூபாய் 13.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  மொத்தமாக தெற்கு ரயில்வே அளவில் இந்த மின்னணு ஏல முறையில் 151 ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 82.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது.  மின்னணு ஏல முறையில் எளிதான, விரைவான சேவை கிடைக்கிறது. முன்வைப்புத் தொகை செலுத்துவது, ஒப்பந்த ஆணை வழங்குவது போன்றவை விரைவாக இணையதளம் மூலமாக நடைபெறுகிறது.

 

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *