Loading

பெங்களூரு:கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, வரும் 28ம் தேதி முதல், பா.ஜ., தலைவர்கள் சுற்றுப்பயணம் துவங்குகின்றனர்.

கர்நாடகாவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, நாளை முதல், காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை துவங்க உள்ளது.

இதற்கிடையில், பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., அரசு ஓராண்டு நிறைவு செய்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்துவது குறித்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

வரும் 28ம் தேதி, தொட்டபல்லாபூரில் நடத்த திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி திடீரென ஒத்தி வைக்கப் பட்டு உள்ளது.இந்நிலையில், அதே நாள் சட்டசபை தேர்தலுக்காக மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்ள பா.ஜ., திட்டமிட்டுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உட்பட முக்கிய தலைவர்கள் சுற்றுப் பயணத்தில் பங்கேற்பர்.

இது குறித்து ஆலோசிப்பதற்காக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில், மாநில நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *