சேலம்:
ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை செட்டியார் காட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா, முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று சேலத்தில் இருந்து டேனிஷ்பேட்டைக்கு காரில் சென்றார். சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பூசாரிப்பட்டி மேம்பாலத்தில் கார் வரும் போது லேசான மழையின் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
இதில் அந்த கார் பாலத்தின் நடுவில் உள்ள தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு தடுப்பு சுவர் மீது ஏறி நடுரோட்டில் குறுக்காக நின்றது. இந்த விபத்தில் ராஜா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-Naveenraj
+ There are no comments
Add yours