சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிரடியாக சரிந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: –
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 33 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11,154 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 05 ஆயிரத்து 822 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 546 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours