செஞ்சி:
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவி ஒருவர், உறவினர் வீட்டில் தங்கி செஞ்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 பயின்று வருகிறார். இந்த மாணவியை கர்ப்பமாக இருப்பது தெரியவரவே விசாரணையில் கூட்டு பலாத்காரம் செய்ததாக விழுப்புரம் அடுத்த ஈச்சங்குப்பத்தைச் சேர்ந்த மோகன் (80), மண்ணாங்கட்டி (எ) வெங்கடேசன் (30), இளையராஜா(28) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்ததில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வெங்கடேசன் (25), பிரபு (37), பாபு(22), சத்யராஜ் (28) மற்றும் குப்பு (50) என்ற பெண் என மேலும் 5 பேரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி நாதா கூறுகையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். இச்சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
+ There are no comments
Add yours