சேலம்:
சேலம் வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு பொருள்கள் டோக்கன் கேட்டு, ரேஷன் கடை பணியாளரை அவதூறாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, திமுக பிரமுகர்கள் இருவர் மீது வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரேசன் கடையில், திமுகவைச் சேர்ந்த இருவர், தங்களிடம் கூடுதலாக டோக்கன் கொடுக்குமாறு கேட்டு, பணியாளரை அவதுாறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் அனைத்து ரேஷன் கடைகளையும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அடைத்து விட்டு, பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, வாழப்பாடி ரேஷன் கடை பணியாளர் வைரவேல், வாழப்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.
இவரது புகாரின்பேரில், இரு பிரிவுகளின் கீழ் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கமல்ராஜா, மணி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
+ There are no comments
Add yours