உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், 351 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, ராணுவ அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையின்படி, குறிப்பிட்ட பொருட்கள் மீதான தடை மூன்று ஆண்டுகளில் முழுமையாக அமலில் இருக்கும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட 351 பொருட்களில் 172 பொருட்கள், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட உள்ளது.
89 பொருட்கள் 2023ம் ஆண்டுக்குள்ளும், 90 பொருட்கள் 2024ம் ஆண்டுக்குள்ளும், இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் அன்னிய செலாவணி, மிச்சமாகும் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முப்படைகளில் பயன்படுத்தப்படும், 2,5௦௦க்கும் அதிகமான பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours