சேலம்;

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற வாசகங்களை அகற்றவேண்டும் சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்  ஐந்தாயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.

அன்னபூரணி அம்மா என்ற பெண் போலி சாமியாரை ஊக்குவிக்கும் விதமாக திமுக சார்ந்தவர்கள் கருப்பர் கூட்டம் உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் மூலம் அடையாளப் படுத்தி வருகின்றனர் சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்,

தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்க உள்ளது அந்த தொகுப்பு வழங்கப்படும் மஞ்சள் பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதப்பட்டுள்ளது இந்த உலகத்தில் எங்கும் நடக்காத செயல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது புத்தாண்டை மாற்றுவது பெயர் மாற்றம் செய்வது இது போன்ற தேவையற்ற செயல்கள் செய்துவருகின்றனர் சித்திரை தான் தமிழ் புத்தாண்டு
காலம் காலமாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர் அரசியல் காரணத்திற்காக வேண்டுமென்றே தை முதல் தேதியை புத்தாண்டு என்று அறிவித்துள்ளார்கள் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது ஏற்கனவே திமுக இவ்வாறு அறிவித்து அதன் பிறகு ஆட்சிக்கு வந்த மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்காலத்தில் வாபஸ் பெறப்பட்டது தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிப்பது தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது என்று கூறினார்.

மேலும் பொங்கல் பரிசாக 20 பொருட்களை வழங்கும் தமிழக அரசு பொங்கல் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் தற்போது தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கை வைத்தார் அதன் அடிப்படையில் தற்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் பொங்கல் பரிசுத் தொகையுடன் ஐந்தாயிரம் ரூபாய் பணம்
வழங்க வேண்டும் என்றார்.

அன்னபூரணி அம்மா என்ற பெண் போலி சாமியாரை ஊக்குவிக்கும் விதமாக
திமுக சார்ந்த ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றனர் இந்து மதத்தில் மீண்டும் போலி சாமியார் என்ற பல்வேறு கருத்துக்களை அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் யூடியூப் சேனல்கள் பரப்பி வருகின்றனர் இதனை முழுக்க முழுக்க வெளிப்படுத்துவது திமுகவைச் சேர்ந்த ஊடகங்கள் மட்டுமே என்றார் இந்த பரபரப்புக்கு பின்புலமாக கருப்பர் கூட்டம் செயல்படுவதாக எங்களுக்கு தோன்றுகிறது இது போல மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி கருப்பர் கூட்டம் திமுக ஆதரவு ஊடகங்கள் இந்து மதத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் போலி சாமியார்கள் கருப்பர் கூட்டத்தால் தான் உருவாக்கப்பட்டார்கள் திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு வந்த பிறகுதான் போலி சாமியார்கள் உருவானார்கள் என்று பேசினார் .

-சேலம் ஆ.மாரியப்பன்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *