சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெரு பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க சங்கர் என்ற முதியவர் வீட்டின் வாயில் பகுதியில் உள்ள சாலை ஓரமாக அமர்ந்துள்ளார். இன்று மதியம் அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூச்சல் இட்டதால் பதற்றம் நிலவியது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விருகம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காவலர் ரஞ்சித்தை விருகம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து, மது போதை பரிசோதனை செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய காவலர் காவலர் ரஞ்சித் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கன்மேனாக பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது.
மதுபோதையில் முதியவர் மீது காரை ஏற்றிய காவலர்!.,
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours