டோல்கேட் ஊழியர்களை தாக்கிய பாஜக தலைவர் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்.,

Estimated read time 1 min read

திருச்சி:

திருச்சி அருகே சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய பாஜக மாவட்ட தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பாஜக கொடி கட்டிய வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று வந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள பொன்னம்பலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடியை கடக்க முயன்றது. சுங்கச்சாவடியில் மூன்றாவது லைனில் கடக்க முயன்ரபோது, பாஸ்ட்ராக்கில் பணம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மூன்றாவது லைனில் பணம் வசூலிக்கும் ஆட்கள் இல்லாததால், முதல் லைனுக்கு காரை திருப்பி படும்படி தூரத்திலிருந்து ஊழியர் கையால் சைகையில் தெரிவித்துள்ளனர்.

சுங்கச்சாவடியில் மோதல்

இதனால் கோபமடைந்த காரில் இருந்த அந்த பாஜக பிரமுகர் காரில் இருந்து இறங்கி அப்போது பணியில் இருந்த ஊழியர்களை தகாத வார்த்தைளால் திட்டினார். மேலும் தாக்கவும் முயற்சித்திருக்கிறார். இதனால் அந்த இடத்தில் கூட்டம் கூடியது. மேலும் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அங்கிருந்த நபர் பாஜகவின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரை கூப்பிட்டு தன்னை அடித்து விட்டதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் வாக்குவாதம்

மேலும். அருகில் இருக்கக்கூடிய கட்சி நிர்வாகிகளையும் தொலைபேசி மூலம் வரச் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து திருச்சியிலிருந்து மாவட்ட தலைவர் ராஜசேகர் காரிலும், மணப்பாறையில் இருந்து ஒரு காரில் மற்றும் சில நிர்வாகிகளும் வந்துள்ளனர். தொடந்து காரில் இருந்து இறங்கியவர்கள் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்களை வழி மறைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள்மீது தாக்குதல்

அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த ராஜசேகர் சுங்கச்சாவடியின் ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் உருவானது. இதனையடுத்து அங்கு வந்த ரோந்து போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஊழியர்கள் போராட்டம்

இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களை பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் தாக்கிய காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களி வெளியாகி வைரலான நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. . காவல்நிலையத்தில் எந்தவித பதிலும் இல்லாததால் இன்று காலை மணப்பாறை டிஎஸ்பி அலுவலகம் முன்பு ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours