தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்ப வினியோகம் online மூலம் நாளை 25.11.2021 முதல் துவங்குகிறது. அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், அலுவலக நேரங்களில், விண்ணப்பத்தை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களை, www.tnhealth.tn.gov.in மற்றும், www.tnmedicalselection.net என்ற, இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours